தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  2 Years Of Dmk Govt: திமுகவின் ஈராண்டு ஆட்சி எப்படி இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் பதில்

2 Years Of DMK Govt: திமுகவின் ஈராண்டு ஆட்சி எப்படி இருக்கிறது? முதல்வர் ஸ்டாலின் பதில்

Karthikeyan S HT Tamil
May 07, 2023 01:37 PM IST

2 Years Of DMK Government: திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி: பல்வேறு சாதனைகளையும் செய்திருக்கிறீர்கள் சில விமர்சனங்களும் வந்திருக்கிறது. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் எப்படி இதை பார்க்கிறீர்கள்?

முதல்வரின் பதில்: விமர்சனத்தை பற்றி இம்மி அளவும் நான் கவலைப்படவில்லை. நல்லதை எடுத்துக்கொள்வேன். கெட்டதை புறந்தள்ளி விடுவேன். ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு இதே இடத்தில், உங்களை எல்லாம் சந்தித்தபோது சொன்னேன். இந்த ஆட்சி ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்துதான். ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்டட ஆட்சிக்கு ஓட்டுப்போடாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தப்பட வேண்டும். அந்த அடிப்படையில் எங்களுடைய ஆட்சி இருக்கும் என்று சொன்னேன். அதன்படிதான் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எப்படி இரண்டு வருடங்களாக எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்துக்கொண்டிருந்தீர்களோ, அதேபோல தொடர்ந்து உங்களுடைய ஒத்துழைப்பை இந்த மூன்றாவது ஆண்டிலும், தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டிலும், நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்." இவ்வாறு முதல்வர் பதிலளித்துள்ளார்.

முன்னதாக, திமுக ஆட்சி பொறுப்பேற்று ஈராண்டு நிறைவடைந்ததையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,"ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது.

தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றி தொடரும்!" இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்