தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Poison Gas:தொட்டியில் விழுந்த போனை எடுக்க முயன்றவர் விஷவாயு தாக்கி பலியான சோகம்

Poison Gas:தொட்டியில் விழுந்த போனை எடுக்க முயன்றவர் விஷவாயு தாக்கி பலியான சோகம்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 02, 2023 07:40 AM IST

Poison Gas Attack:தண்ணீருக்குள் விழுந்த செல்போனை தேடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.

உயிரிழந்த ஜெயக்குமார்
உயிரிழந்த ஜெயக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

திருவொற்றியூர் தேரடி ஈசானி மூர்த்தி கோவில் தெரு வைச் சேர்ந்தவர் ஜெயக்கு மார் இவருக்கு வயது 50. இவர், ஒப்பந்த அடிப்படையில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் லாரியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்வதற்காக திருவொற்றி யூர் டி.கே.எஸ். நகர் முதல் தெருவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு வந்தார். பின்னர் அங்குள்ள தரை மட்ட தண்ணீர் தொட்டியில் (சம்ப்) தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயக்குமார் சட்டைப் பையில் இருந்த செல்போன் தவறி தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார், உடனடியாக செல்போனை எடுக்க தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார்.

பின்னர் தண்ணீருக்குள் விழுந்த செல்போனை தேடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார். சுமார் 20 நிமிடமாக அவர் வெளியே வரவில்லை. இதையடுத்து அருகில் இருந்த ஒருவர் உள்ளே இறங்கியபோது விஷ வாயு தாக்கியதால் வெளியே வந்துவிட்டார்.

அப்போது மின்சாரம் தடைபட்டதால் வாளி மூலம் தண்ணீரை வெளியேற்றி விட்டு உள்ளே இருந்த ஜெயக் குமாரை தூக்கி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்க கொண்டு சென்றனர். ஆனால் ஜெயக்குமார் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சாத்தாங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று பலியான ஜெயக்குமார் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

பலியான ஜெயக்குமாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் ஆகும். அவருக்கு ஜெயகுமாரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்