தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Summer:அடுத்த 3 மாதம் ரொம்ப கஷ்டம் தான்-எச்சரித்த வானிலை ஆய்வுமையம்

Summer:அடுத்த 3 மாதம் ரொம்ப கஷ்டம் தான்-எச்சரித்த வானிலை ஆய்வுமையம்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 02, 2023 07:57 AM IST

இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் எப்போதுமே வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்.
சுட்டெரிக்கும் வெயில்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தியா முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையில் எப்போதுமே வெயில் சுட்டெரிக்கும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுஞ்சய் மகா பத்ரா நேற்று காணொலிக் காட்சி வழியாக நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த ஆண்டு கோடைகாலத் தில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட வெப்ப நிலை அதிக அளவில் இருக்கும். தென் இந்திய தீபகற்ப பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட சில வடமேற்கு இந்திய பகுதிகளில் மட்டும் இயல்பான அளவிலோ, இயல்பை விட குறைவான அளவிலோ வெப்ப நிலை இருக்கக்கூடும்.

இதேபோல் பீகார், ஜார்கண்ட், உத்தரபிர தேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஷ்கார், மராட்டியம், குஜராத், பஞ்சாப் மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் நாட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

ஒரு இடத்தின் சமவெளியில் வெப்ப நிலை குறைந்தபட்சம் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரிபாரன்ஹீட்) அளவுக்கும், கட லோரப்பகுதியில் 37டிகிரி செல் சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்) அளவுக்கும், மலைப்பிரதேசங் களில் 30 டிகிரி செல்சியஸ் (86 டிகிரி பாரன்ஹீட்) என்ற அள வில் இருக்கிறபோது அது வெப்ப அலை என குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் 1901-ம் ஆண் டில்இருந்துவெப்பநிலை பதிவு செய்யப்படுகிறது. இந்த கால கட்டத்தில் பிப்ரவரி மாதத்தை பொறுத்தமட்டில், கடந்த பிப்ரவரி மாதம் தான் மிகுந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது. என்று அவர் கூறினார்

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முக்கிய அம்சங்கள்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயல்பான அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கலாம். 1971 முதல் 2020-ம் ஆண்டு வரையி லான கடந்த காலத்தைப் பார்க்கிறபோது, ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 39.2 மி.மீ. மழை பெய்திருக்கிறது.

மேலும் இயல்பான அளவு அல்லது அதற்கு அதிகமான மழை நாட்டின் வடமேற்கு, மத்திய, தீபகற்ப பகுதிகளில் எதிர் பார்க்கலாம். அதே நேரத்தில் நாட்டின் கிழக்கு மற்றும் வட கிழக்கு பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்