தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn New Cabinet: நிதியமைச்சர் ஆனார் தங்கம் தென்னரசு! 5 அமைச்சர்கள் இலாக்காகள் மாற்றம்

TN New Cabinet: நிதியமைச்சர் ஆனார் தங்கம் தென்னரசு! 5 அமைச்சர்கள் இலாக்காகள் மாற்றம்

Kathiravan V HT Tamil
May 11, 2023 11:11 AM IST

PTR தமிழ்நாடு அமைச்சரவையில் துறைகள் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி நிதியமைச்சராக தங்கம் தென்னரசும், தொழில்துறை அமைச்சராக டிஆர்பி ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

ட்ரெண்டிங் செய்திகள்

ஆவடி நாசரிடம் இருந்த பால்வளத்துறை மனோ தங்கராஜிடமும், தகவல் தொழில்நுட்பத் துறை நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் தென்னரசு கவனித்து வந்த தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சராக உள்ள மு.பெ.சாமிநாதனிடம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த விரிவான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதன்படி நிதியமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுவிடம் நிதி,  திட்டங்கள், மனிதவள மேலாண்மை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலன், புள்ளியில் மற்றும் தொல்லியல் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு துறை அமைச்சராக உள்ள மு.பெ.சாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சி துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதன்படி அவரிடம் தமி ஆட்சி மொழி மற்றும் தமிழ் கலாச்சார துறை,  தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, சினிமா தொழில்நுட்பம், புகைப்படங்கள், செய்தித்தாள், அச்சு மற்றும் அரசு அச்சகங்கள் உள்ளிட்ட இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சராக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்