தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Tamilnadu Political Bytes January 24 2023

HT Tamil Bytes: ‘3 பேச்சு, 2 பேட்டி, 1 அறிக்கை’ நிமிடத்தில் 6 செய்தி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 24, 2023 01:04 PM IST

சற்று முன்பு, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் அளித்த பேட்டிகள், பேச்சுகள், அறிக்கைளை ஒரே செய்தியில் பார்க்கலாம்.

ஜனவரி 24 அன்று பேட்டியளித்த தலைவர்களின் புகைப்படங்கள்   -கோப்புபடம்
ஜனவரி 24 அன்று பேட்டியளித்த தலைவர்களின் புகைப்படங்கள் -கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இரட்டை இலை சின்னம் முடக்குவதற்கு திமுக ஓபிஎஸ்சை வைத்து சூழ்ச்சி செய்கிறது என்று, சி.வி.சண்முகம் தெரிவித்தது தொடர்பாக கேள்வி கேட்ட பொழுது, அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு , ‘சி.வி சண்முகம் இரவில் சொன்னாரா? அல்லது பகலில் சொன்னாரா?’  என, கிண்டலாக பதிலளித்தார். 

வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பேச்சு:

தமிழக முதல்வர் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற மாதிரி பணக்காரன் ஏழை ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். சிறிய குழந்தைகள் பள்ளிக்கு செல்ல காலை உணவில் இருந்து முதியவர்கள் ஓய்வுபெறும் வயதில் முதியோர் உதவித்தொகை பெறும் வரை அனைவருக்கும் பயன்பெறும் ஆட்சியாக இந்த ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது, என வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசினார்.

மாணிக்கம் தாகூர் எம்.பி., பேச்சு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடம் கேட்டு நடந்து வரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசுகையில், ‘‘2024ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமர் ஆனவுடன் முதல் பணியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்’ என்று பேசினார்.

சமக தலைவர் சரத்குமார் பேட்டி:

செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், அதிமுகவின் தற்போதை நிலை குறித்து கேள்விக்கு பதிலளிக்கையில், ‘அதிமுக பலவீனம் அடைந்துள்ளது, அதிமுக இணைந்து செயல்பட்டலால் தான் அதிமுகவிற்கு நல்லது,’’ என்று பேட்டியளித்தார். 

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி பேட்டி!

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அர்ச்சகர் பயிற்சி கல்லூரிகளை துவங்க வேண்டும். இதில், 6-ம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை, வழக்கமான கல்வியுடன் இந்து மதம், ஆகமம், வேதங்கள், பன்னிரு திருமுறைகள். திவ்யபிரபந்தம் ஆகியவையும் கற்றுத்தரப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை எடுக்க வேண்டும். இல்லையனில் அப்படியொரு துறையை தேவையில்லை. மற்ற மதத்தினருக்கு உள்ளதுபோல், இந்துக்களுக்கும் தங்களது திருக்கோயில்களை நிர்வகிக்கவும், அதன் மூலம் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் நடத்தும் சுதந்திரமும் வேண்டும். அதுதான் உண்மையான மதச்சார்பின்மை, என்று வானதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்டேசன் பேச்சு:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெறும் போது கூட அவர்களால் கல்லூரியை கண்ணால் பார்க்க முடியாது. கண்ணால் பார்க்க முடியாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்கும் ஒரே பிரதமர் மோடி தான். ஏன் பிரதமர் மோடி படிக்காமலேயே பட்டம் பெற்றவர் தான். அது தொடர்பான வழக்கு கூட நிலுவையில் உள்ளது. படிக்காமலேயே பட்டம் வாங்கிய பிரதமரால், கல்லூரியை பார்க்காமலேயே மாணவர்கள் பட்டம் வாங்கும் அவலத்தை மாற்றவே போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மதுரை ஆர்பாட்டத்தில் வெங்கடேசன் பேசியிருக்கிறார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்