தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu Assembly 2023: ‘இல்லை..! இல்லை..! இல்லை..!’ பேரவையில் பட்டியல் போட்ட முதல்வர்

TamilNadu Assembly 2023: ‘இல்லை..! இல்லை..! இல்லை..!’ பேரவையில் பட்டியல் போட்ட முதல்வர்

Kathiravan V HT Tamil
Apr 21, 2023 11:47 AM IST

TamilNadu Assembly 2023: காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் பதிலளித்து வருகிறார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் - கோப்புப்படம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் - கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று காவல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் இரண்டாவது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுறை அளித்து வருகிறார். அதில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சாதி சண்டைகள் இல்லை, மத சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கி சூடு இல்லை, காவல் நிலைய மரணங்கள் இல்லை.

இவையெல்லாம் இல்லை என்பதன் அடையாளமாகத் தான் புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள் வருகின்றன. ஒரு மாநிலம் வளருகிறது என்றால் அது அமைதியான மாநிலமாக இருக்கிறது என்று பொருள்.

எந்த குறுக்கீடுமின்றி காவல்துறையினரை செயல்பட அறிவுறுத்தி உள்ளோம். தமிழ்நாட்டில் சாதி, சமய வெறியர்கள், சமூகவிரோதிகள் மீது அரசு மேற்கொண்ட கடும் நடவடிக்கைகள் காரணமாக சாதி சமய பூசல்கள் ஏதுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவுகிறது.

காவல்துறையினர் மாநிலம் முழுவதும் குற்றநடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகள், கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து கொலை, கொள்ளை உள்ளிட்ட சமுதாய குற்றங்களை ஈடுபடுவோர் மீதும் ஆட்களை கடத்தி பணம் பறித்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, மணல் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல், கட்டப்பஞ்சாயத்துக்களில் ஈடுபடுதல், அதிக வட்டி வசூலித்தல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், கஞ்சா, நிதிநிறுவன மோசடி, சைபர் குற்றங்கள், சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய மோதல் ஒன்று அரசின் வேகமான நடவடிக்கைகளால் எப்படி தடுக்கப்பட்டது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்று பரப்பப்பட்ட வதந்திகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்