தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Suriya Siva: ‘விரைவில் அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும்’ - பகீர் கிளப்பிய சூர்யா சிவா!

Suriya Siva: ‘விரைவில் அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும்’ - பகீர் கிளப்பிய சூர்யா சிவா!

Divya Sekar HT Tamil
Jul 30, 2023 12:38 PM IST

கூடிய விரைவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும் என சூர்யா சிவா குறிப்பிட்டுள்ளார்.

சூர்யா சிவா
சூர்யா சிவா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் OBC அணி மாநில பொது செயலாளர் சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் செயல்களில் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால், பொறுப்பு அவரை தேடி வரும்" என அறிக்கை மூலம் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்தார். இருப்பினும் அவர் வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் குறித்து சூர்யா சிவா வெளியிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன் வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும் நான் அப்படிப்பட்ட ஒரு நபர் அண்ணாமலை என்று நினைத்தேன் ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்