தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாணவர்களே அலர்ட்! சுகாதார இணை மருத்துவப் பயிற்சி சேர்க்கை – தகுதிகள் என்ன?

மாணவர்களே அலர்ட்! சுகாதார இணை மருத்துவப் பயிற்சி சேர்க்கை – தகுதிகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Jun 04, 2023 12:35 PM IST

இணை மருத்துவ பயிற்சி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மருத்துவ மேலாண்மை மற்றும் பொது செவிலியர் (NURSING AND HOSPITAL MANAGEMENT) பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் (ஒருங்கிணைந்த படிப்பு), 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ ஆய்வக நுட்புனர் (LAB TECHNOLOGY), பயிற்சி காலம் இரண்டு ஆண்டுகள், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை அரங்கு நிபுணர் (OPERATION THEATRE TECHNOLOGY), பயிற்சி காலம் இரண்டு ஆண்டுகள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுகாதார உதவியாளர் (PATIENT CARE), ஓராண்டு பயிற்சி காலம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

விண்ணப்பம் வேண்டுவோர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கல்வி உதவி மையத்தில் நேரிலோ, பகிரி வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். 30.07.2023க்குள் 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிபட்ச வயது வரம்பு 21.

குறிப்பிட்ட பயிற்சிகளுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். குறிப்பிட்ட மாவட்டங்களில் உண்டு உறைவிட வசதி உள்ளது.

அரசு பதிவுபெற்ற மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் செய்முறைப் பயிற்சியும் ஸ்கில் இந்தியன் உறுப்புக் கல்லூரிகளில் கோட்பாடு வகுப்பும் வழங்கப்படும்.

இதன் நோக்கம், பொதுசேவை, தனியார் பணி மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ பணியாளர்களை உருவாக்குதல், பகிரி/கட்செவி வாயிலாக விண்ணப்பம் பெற கைபேசி எண் 9751222122 விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2023 ஆகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்