தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ssc Exam : ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SSC Exam : ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Priyadarshini R HT Tamil
Apr 17, 2023 11:10 AM IST

SSC Exam and Training : மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் அதற்கான பயிற்சிகளும் வேலைவாய்ப்பு மையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : 

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு 2023 தொடர்பான அறிவிப்பை கடந்த 3ம் தேதி வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி நிலையில் 7500 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இத்தேர்வுக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் www.sss.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியில் விண்ணப்பிக்க வரும் மே 3ம் தேதி கடைசி நாளாகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 4ம் தேதியாகும்.

தென் மண்டலத்தில் சுணினி அடிப்படையிலான தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. ஆந்திரத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழகத்தில் 7 மையங்களிலும், தெலங்கான வில் 3 மையங்களிலும் தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னபார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices. tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் இவ்விணைய தளத்தில் TN Career Services Employment மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் AIM TN என்ற YOUTUBE Channelலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொலிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்புகொண்டு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்