தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Southern Railway Announcement: பரமரிப்பு பணி…சென்னை - கோவை இடையே ரயில்கள் ரத்து

Southern railway announcement: பரமரிப்பு பணி…சென்னை - கோவை இடையே ரயில்கள் ரத்து

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 29, 2022 11:49 AM IST

பராமரிப்பு பணி காரணமாக சென்னை - கோவை, சென்னை - சேலம் இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணி காரணமாக கோவை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக கோவை மார்க்கமாக செல்லும் ரயில்கள் ரத்து

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு

சென்னை எழும்பூர் - சேலம் (வண்டி எண்:22153) இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை டிசம்பர் 1, 2ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சேலம் - எழும்பூர் (22154) இடையே இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - கோவை (12679) இடையே மதியம் 2.30 மணிக்கும், கோவை - சென்ட்ரல் (12680) இடையே காலை 6.15 மணிக்கும் இயக்கப்படும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - கோவை (12675) இடையே காலை 6.10 மணிக்கும், கோவை - சென்ட்ரல் (12676) இடையே மதியம் 3.15 மணிக்கும் இயக்கப்படும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - கோவை (12243) இடையே காலை 7.10 மணிக்கும், கோவை - சென்னை சென்ட்ரல் (12244) இடையே மதியம் 3.05 மணிக்கும் இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point