தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sasikala:ஓபிஎஸ் ஈபிஎஸ் -யை இணைப்பேன்;ஆனால் தலைமை? - சசிகலாவின் மாஸ்டர் ஸ்கெட்ச்!

Sasikala:ஓபிஎஸ் ஈபிஎஸ் -யை இணைப்பேன்;ஆனால் தலைமை? - சசிகலாவின் மாஸ்டர் ஸ்கெட்ச்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 24, 2023 05:05 PM IST

எடப்பாடி பழனிசாமியையும் ஓ பன்னீர் செல்வத்தையும் ஒருங்கிணைத்து நான் தலைமை ஏற்க வாய்ப்பு இருக்கிறது நிச்சயமாக அது நடக்கும்

சசிகலா சூளுரை
சசிகலா சூளுரை

ட்ரெண்டிங் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக மாறும் வகையில் கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து பொதுக்குழு தீர்மான எதிர்ப்பு வழக்கானது உடனே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால், வழக்கு நேற்று பட்டியலிடப்படவில்லை. இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. 

ஆகையால் இந்த வழக்கின் தீர்ப்பானது எழுத்துபூர்வ வாதத்தை ஆராய்ந்து திங்கட் கிழமை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈபிஎஸ் vs ஓபிஎஸ் விவகாரம் இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில் சசிகலா, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் -யை இணைப்பேன் என்று சொல்லியிருக்கிறார்.

சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எடப்பாடி பழனிசாமியையும், ஓ பன்னீர் செல்வத்தையும் ஒருங்கிணைத்து நான் தலைமை ஏற்க வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக அது நடக்கும். 

எதிர்கட்சிகள் எப்படி நினைத்தாலும் அதிமுக என்பது தலைவர் போட்ட விதை அது. அதை வளர்த்து சென்றவர் அம்மா ஜெயலலிதா அவர்கள். ஆகையால் அவர்கள் வழி வந்த நாங்கள் கட்சியை சிதறவிடமாட்டோம். ஆகையால் கட்சியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று கட்சியை வெற்றி பெற செய்வோம்.” என்று அவர் பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்