தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Goat Sales: நெருங்கும் பக்ரீத் ..தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை படுஜோர் - எத்தனை கோடி தெரியுமா?

Goat Sales: நெருங்கும் பக்ரீத் ..தமிழகம் முழுவதும் ஆடுகள் விற்பனை படுஜோர் - எத்தனை கோடி தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jun 24, 2023 12:40 PM IST

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடைச் சந்தைகளில் இன்று ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

ஆடுகள் விற்பனை
ஆடுகள் விற்பனை

ட்ரெண்டிங் செய்திகள்

இஸ்லாமியர்களின் பெருநாளாக கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகை வரும் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கால்நடைக்கு சந்தைக்கு பெயர் போன தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம், திருச்சி மாவட்டம் மணப்பாறை, சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி உள்ளிட்ட இடங்களில் ஆடுகளை வாங்க அதிகாலை முதலே வியாபாரிகள் குவிந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் சந்தைக்கு தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 

அதிகாலை முதலே செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், குறும்பாடுகள், கொடி ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. ஒரு கிலோ 800 முதல் 1500 ரூபாய் வரையும் ஒரு ஆடு 6 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையும் விற்பனையானது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் சேலம், வீரகனூர் ஆட்டுச்சந்தைக்கு வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். இந்த கால்நடைச் சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்பட்டதில் ரூ. 4 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. திருப்பூர், தாராபுரத்தை அடுத்த குண்டடம் சனிக்கிழமை வாரச்சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.3 கோடிக்கு விற்பனையான ஆடுகள் நடைபெற்றது. விழுப்புரம், செஞ்சி வாரச் சந்தையில் சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் , ஆட்டுச்சந்தையில் சுமார் 6 கோடிகளுக்கு மேல் வியாபாரம் நடைப்பெற்றுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்