தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்ய மறுப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்ய மறுப்பு

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 15, 2023 11:09 AM IST

செந்தில் பாலாஜியின் நீதிமைன்ற காவலை ரத்து செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருடைய நீதிமன்ற காவலை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களிலும், தலைமைச் செயலாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை நெஞ்சு வலியால் துடித்த அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரை அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று மருத்துவமனயில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி நீதிபதி அல்லி அவரை வரும் 28ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் . தன்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். தன்னை ரிமாண்ட் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் செந்தில் பாலாஜியின் நீதிமைன்ற காவலை ரத்து செய்ய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருடைய நீதிமன்ற காவலை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அதிமுக ஆட்சியில்போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்து கழகத்தில் 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதில் கடந்த 2018ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2021ல் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே வழக்குப்பதிவு செய்திருந்த அமலாக்கத்துறை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியது.

இதையடுத்து செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல் முறையீட்டில் அமலாக்கத்துறை சம்மனை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (14 -06- 2023) காலை முதல் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை தொடங்கிய நிலையில், செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் கதறி அழுதார். இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவருக்கு நீதிமன்ற காவல் விதித்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்