தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Rameshwaran, Mandapam Fisherman Banned For Fishing Marking Anthoniyar Church Festival In Katchatheevu

Rameshwaram: கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழா - மீனவர்கள் புறக்கணிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 23, 2024 07:55 AM IST

அந்தோணியர் ஆலய திருவிழா இன்று தொடங்க இருக்கும் நிலையில் ராமேஸ்வரம், மண்டபத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், திருவிழாவை மீனவர்கள் புறக்கணித்துள்ளனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலயம் (கோப்புப்படம்)
கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலயம் (கோப்புப்படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இரண்டு நாள்கள் நடைபெறும் திருவிழாவில் ராமேஸ்வர், மண்டபம் பகுதியை சேர்ந்த மீன்வர்கள் சென்று பங்கேற்பார்கள். இதையடுத்த இந்த ஆண்டுக்கான திருவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

கொடியேற்றத்துடன் தொடங்கியிருக்கும் திருவிழா நாளை நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து திருவிழாவை முன்னிட்டு இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மீனவர்கள் போராட்டம்

 

இந்த திருவிழாவில் இந்தியாவில் இருந்து 3, 500 பேரும், இலங்கையில் இருந்து 4 ஆயிரம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கைது செய்யப்பட்ட மீன்வர்களை விடுவிக்க கோரி நடைபயண போராட்டத்தையும் நடத்தினர்

இதைத்தொடர்ந்து மீனவர்களுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடைபயண போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், கச்சத்தீவில் நடைபெற இருக்கும் புனித அந்தோணியர் ஆலய திருவிழாவை புறக்கணிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

அத்துடன், கச்சத்தீவு செல்ல மீனவர்கள் தங்களது படகுகளை கொடுக்க முடியாது என அறிவித்தனர்.

இதனால் இலங்கையில் நடைபெற இருந்த கச்சத்தீவு புனித அந்தோணியர் ஆலய திருவிழாவில் இந்தியா தரப்பிலிருந்து பக்தர்கள் பங்கேற்கவில்லை என ராமேஸ்வர் வேர்க்கோடு பங்குதந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு திருவிழாவுக்கு பணம் கட்டிய நபர்களின் தொகை மீண்டும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்