தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Warning: ’குடையை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!’ இதோ விவரம்!

Rain warning: ’குடையை எடுத்துக்கோங்க! அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை!’ இதோ விவரம்!

Kathiravan V HT Tamil
Nov 02, 2023 11:31 AM IST

”வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இலங்கை மற்றும் அதனி ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது”

மழை எச்சரிக்கை
மழை எச்சரிக்கை

ட்ரெண்டிங் செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் இலங்கை மற்றும் அதனி ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இன்றுடன் முடியும் அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது. பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும். கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்