தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rahul Slams Modi: ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி - ராகுல் குற்றச்சாட்டு

Rahul slams Modi: ஆங்கிலேயர் ஆட்சி போலவே மோடி ஆட்சி - ராகுல் குற்றச்சாட்டு

Karthikeyan S HT Tamil
Sep 07, 2022 08:03 PM IST

ஆங்கிலேயர்களை போல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ட்ரெண்டிங் செய்திகள்

கன்னியாகுமரியில் நடைபெற்ற ஒற்றுமை பயணத் தொடக்க விழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: அருமையான இயற்கை சூழலில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இருந்து இந்தியாவின் ஒற்றுமை பயணத்தை தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது மிகவும் முக்கியமான தருணம். சிலர் தேசியக் கொடியை பார்த்து சாதாரண கொடி என்று நினைக்கலாம். தேசியக் கொடி வெறும் துணி மட்டுமல்ல. அதைவிட மிகவும் மேலானது.

தேசியக்கொடி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தக் கொடி தனி நபருக்கானது அல்ல. ஒரு மதத்திற்கோ, மாநிலத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானது அல்ல தேசியக் கொடி. நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமானது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையை உறுதிபடுத்துகிறது. தேசியக் கொடி பாஜகவின் தனிப்பட்ட சொத்து என நினைக்கிறார்கள். மதம் மற்றும் மொழியால் நாட்டை பிளவுபடுத்திவிடலாம் என பாஜக நினைக்கிறது. நாட்டை ஒரு போதும் பிளவுபடுத்த முடியாது. அவர்கள் இந்தியர்களை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இந்திய மக்கள் ஒருநாளும் பாஜகவிற்கு அச்சப்படமாட்டாரகள்.

நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மூலம் அச்சுறுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்களினால் எங்களை அச்சுறுத்தவோ, முடக்கவோ முடியாது. 

பாஜக ஆட்சியில் சிறு, குறு தொழில்கள் முடக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் இந்தியா பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பெரு முதலாளிகள் இல்லாமல் பாஜகவால் இருக்க முடியாது. பெரு முதலாளிகளுக்கான திட்டங்களையே பிரதமர் கொண்டு வருகிறார். விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டிருக்கிறது. இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியைப் போலவே பிரதமர் மோடியின் ஆட்சியும் நடக்கிறது. வரலாற்றில் இல்லாத மிக மோசமான காலகட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். எனவே இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் நாம் ஒன்றினைக்க வேண்டும் அதற்காக தான் இந்த ஒற்றுமை நடபயணத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்