PTR Vs Annamalai: ’அண்ணாமலை பகிர்ந்த சர்ச்சை வீடியோ!’ தனது பாணியில் பிடிஆர் பதிலடி!
”இன்னும் பல தமிழக பாஜக தலைவர்கள் வரலாம், போகலாம், ஆனால் தமிழகம் தனது இருமொழிக் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது”

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
கடந்த சில நாட்களாக ட்விட்டரில் ஓய்ந்து இருந்த பிடிஆர்- அண்ணாமலை இடையிலான கருத்து யுத்தம் மீண்டும் தொடங்கி உள்ளது.
திமுக பொறுப்பேற்றது முதல் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசின் நிதி மற்றும் பொருளாதார கொள்கைகளை விமர்சித்து கடுமையாக பேசி வந்தார். அவரது ட்விட்டுகள் தேசிய அளவில் பெரும் பேசு பொருள் ஆனது.
ஆடியோ சிக்கல்
பின்னர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குரலில் பேசுவது போல் வெளியான ஆடியோவால் அவரது ஆக்டீவ் அரசியல் படிப்படியாக குறையத் தொடங்கியது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் போலி ஆடியோவை உருவாகி கசியவிட்டதாக பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார்.
