தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin Milk: ஆவின் பால் விநியோகத்தில் 3வது நாளாக தொடரும் பிரச்சனைகள், விநியோகம் பாதிப்பு

Aavin Milk: ஆவின் பால் விநியோகத்தில் 3வது நாளாக தொடரும் பிரச்சனைகள், விநியோகம் பாதிப்பு

Manigandan K T HT Tamil
Jun 01, 2023 09:44 AM IST

Tamil Nadu Milk Agents Workers Welfare Association: ‘ஆவினில் பணியாற்றும் கறுப்பு ஆடுகளால் பால் முகவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு, அரசுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.’

ஆவின் பால்
ஆவின் பால்

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது காலை 6.00 மணி நிலவரப்படி சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்களும், காக்களூர் பால் பண்ணையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்களும் பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளிலும், பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் விநியோகம் செய்ய வேண்டிய சுமார் 1லட்சம் லிட்டருக்கும் மேலான ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு பொதுமக்கள் தனியார் பால் நிறுவனங்களை நோக்கி செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தினசரி அதிகாலை 2.30 மணிக்குள் ஒவ்வொரு பால் பண்ணைகளில் இருந்தும் மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்த விநியோக வாகனங்கள் பால் பாக்கெட்டுகளை ஏற்றி சென்றால் தான் பால் முகவர்களுக்கு குறித்த நேரத்தில் விநியோகம் செய்ய முடியும். அப்போது தான் பொதுமக்களுக்கும், சில்லறை வணிகர்களுக்கும் குறித்த நேரத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளை பால் முகவர்களால் விநியோகம் செய்ய முடியும்.

தொடர்ச்சியாக ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், " பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் மற்றும் நிர்வாக இயக்குனர் இருந்த சுப்பையன் ஐஏஎஸ் ஆகியோரது காலத்தில் சீர்குலைந்து போன பால் கொள்முதல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் இன்னும் சரி செய்யப்படாததால் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தில் மீண்டும், மீண்டும் காலதாமதம், தட்டுப்பாடு ஏற்பட்டு பால் முகவர்கள் சொல்லெனா துயருக்கு ஆளாகி வருகின்றனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , ஆவின் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ள திரு. வினீத் ஐஏஎஸ் ஆவினில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளை களைந்து ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு, தாமதம் ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுப்பார்கள் என்கிற நம்பிக்கை இருந்ததாலும் கூட ஆவினில் பணியாற்றும் கறுப்பு ஆடுகளால் பால் முகவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு, அரசுக்கும் தொடர்ந்து அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரும், நிர்வாக இயக்குனரும் இந்த பிரச்சனையை தீர்க்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்