தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Job Opportunities : தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - எங்கு? எப்போது? - விவரங்கள் உள்ளே

Job Opportunities : தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - எங்கு? எப்போது? - விவரங்கள் உள்ளே

Priyadarshini R HT Tamil
May 05, 2023 01:08 PM IST

வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விஐடி பல்கலைக்கழகத்தில் மே 11ம் தேதி நடத்தப்படவுள்ளது. 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெற பள்ளிக் கல்வி முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், விஐடி பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் மே 11ம் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலூர் விஐடி பல்கலைக்கழகத் தில் நடத்த உள்ளன.

முகாமை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.

இந்த முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

10 மற்றும் 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டம், பொறியியல், செவிலியர் பயிற்சி, பார்மசி ஆகிய கல்வித்தகுதி 0416-2290042, தேர்ச்சி பெற்ற வேலை நாடுநர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாம் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படவுள்ளது.

எனவே, தனியார் துறை பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 11ம் தேதி நடைபெறவுள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 94990 55896, 86109 77602, 87780 78130, 81487 27787,90955 59590 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்