தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Airport Extension : பரந்தூர் விமான நிலைய ஆய்வு பணி: தகுதிவாய்ந்த நிறுவனம் செய்ய வேண்டும் – வல்லுனர்கள் வலியுறுத்தல்

Airport Extension : பரந்தூர் விமான நிலைய ஆய்வு பணி: தகுதிவாய்ந்த நிறுவனம் செய்ய வேண்டும் – வல்லுனர்கள் வலியுறுத்தல்

Priyadarshini R HT Tamil
May 14, 2023 10:59 AM IST

Parandhur Airport : பரந்தூர் விமான நிலைய பகுதியில் நீர்நிலைகள் அதிகம் இருப்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழலில், நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய பெர்கெர் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளதா?

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிறுவனம் தான் கேரளாவில் சபரிமலை கோயிலில் இருந்து 48 கி.மீ. தொலைவில் 2,263 ஏக்கரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கான சூழல், இதர தாக்கங்கள் அறிக்கையை கேரள அரசிற்காக மேற்கொள்ளும் பணியை பெற்றுள்ளது.

தமிழகத்திலும் ஜப்பான் நிறுவனத்தின் உதவியுடன் தமிழகத்தின் பல்லுயிர் பெருக்கம் குறித்தான ஆய்வுகளையும் மேற்கொண்டு இந்நிறுவனம் அரசிற்கு அறிக்கையை அளித்துள்ளது.

இந்நிறுவனத்தை 2018ம் ஆண்டில் WSP எனும் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. பொறியியல், பயணத்துறைகளில் (Transport) அதிக நிபுணத்துவம் (ஏறக்குறைய 5,000 நிபுணர்கள்) இந்நிறுவனம் பெற்றுள்ளது.

விவசாய நிலங்கள், நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதி-

விமான நிலையத்திற்கான 4,791 ஏக்கரில், 2,605 ஏக்கர் ஈர நிலங்களாக உள்ளது. மத்திய அரசின் சமீபத்திய அறிக்கையில் இந்தியாவிலேயே நீர்நிலை ஆக்கிரமிப்பில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகம் உள்ளது

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்றாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுவது என்ன?

திருப்போரூர் பகுதியில் விவசாய நிலங்கள், நீர் நிலைகள் குறைவாகவும், தரிசு நிலங்கள் அதிகமாகவும் இருப்பதால் அங்கு விமான நிலையம் அமைக்கலாம்.

சென்னை விமான நிலையத்தை (40 சதவீதத்திற்கு குறைவான சென்னைவாசிகள்தான் சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்) விரிவாக்கம் செய்வதற்குப் பதிலாக, கோவை, மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கலாம்.

பரந்தூர் விமான நிலைய பகுதியில் நீர்நிலைகள் அதிகம் இருப்பதால், அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழலில், நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய பெர்கெர் நிறுவனம் நிபுணத்துவம் பெற்றுள்ளதா?

இந்நிறுவனம் குறித்து பல்வேறு மோசமான செயல்பாட்டு அறிக்கைகளும் உள்ளன.

ஆப்கனிஸ்தானில் இந்நிறுவனம் பல்வேறு ஒப்பந்தங்களில் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது.

அமெரிக்காவின் நீதித்துறை முன்பாக Foreign Corrupt(லஞ்சம்)Practices Act கீழ், இந்நிறுவனம் ஆசிய நாடுகளில் அரசிற்கு லஞ்சம் கொடுத்து கிரிமினல் குற்றம் புரிந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளது.

உலக வங்கியால் தனது ஊழலுக்காக ஏலத்தில் பங்கேற்க தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

புளோரிடாவில், 2019ம் ஆண்டில் பாதசாரிகளின் மேம்பாலம் இடிந்தபோது, அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதை நீக்கும் வழிமுறைகளை தயார் செய்யாமல் விட்டதற்காக, கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது.

மேலும், இந்நிறுவனம் வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து, அதற்கேற்றாற்போல் திட்டங்களை உருவாக்கித்தரும் என்பதால், நீர்நிலைகள் விஷயத்தில் போதிய நிபுணத்துவம் இல்லாததாலும், நிறுவனத்தின் அறிக்கை உண்மையிலேயே, தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு சாதகமாக அமையுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதால், சுயேச்சையான நீரியல் நிபுணர்களின் கருத்தையும், தமிழக அரசு கேட்டு, நீர்நிலைகளை பாதுகாக்க வேறு இடத்தை விமான நிலையத்திற்கு தேர்ந்தெடுத்தோ அல்லது உறுதியான நீர்நிலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தோ, உரிய நடவடிக்கைகளை உள்ளூர் மக்களையும் கலந்து ஆலோசித்து மேற்கொள்வது சிறப்பாக இருக்கும். எனவே தமிழக அரசு அதை செய்வதற்கு முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்