தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: 'மரித்துபோனதா மனிதம்'கோவையில் அலட்சியத்தால் பறிபோன பெயிண்டர் உயிர்

Coimbatore: 'மரித்துபோனதா மனிதம்'கோவையில் அலட்சியத்தால் பறிபோன பெயிண்டர் உயிர்

Pandeeswari Gurusamy HT Tamil
May 12, 2023 12:45 PM IST

Crime: பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார், உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தீவிர‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயிண்டர் உயிரிழப்பு
பெயிண்டர் உயிரிழப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பார்ட்மெணட் உள்ளது. இந்த அடுக்குமாடிக்குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முரளி என்ற பெயிண்டர், அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50), சாய்பாபா காலனி ஹரிதாஸ் ஆகிய இருவரை இன்று வேலைக்கு அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். காலை 9.30 மணியளவில் தொங்கு சாரம் மூலம் பெயிண்ட் அடிக்கத் துவங்கி உள்ளனர். சாரத்தில் சந்திரன் தொங்கியபடி பெயிண்ட் அடித்து உள்ளார். மற்ற இருவரும் கயிரை பிடித்து உள்ளனர். சிறிது நேரத்தில் கயிறு அறுந்து சந்திரன் தலைகீழாக விழுந்து உள்ளார். 4 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்தவரின், தலை சுவற்றில் மோதியது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் , கவலைக்கிடமாக இருந்துள்ளார். உடன் வேலை செய்தவர்கள் அதிர்ச்சியாகி, பயத்தில் நடுங்கியபடி நின்று உள்ளனர். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரனை ஒரு மணி நேரம் ஆகியும், குடியிருப்பு வாசிகளும் கண்டுகொள்ளாமல் விட்டதாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்க வில்லை. நீண்ட நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து உள்ளனர். 108 ஆம்புலென்ஸில் வந்தவர்கள் சந்திரனை பரிசோதனை செய்ததில், அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார், உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் தீவிர‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழே விழுந்து அடிபட்ட சந்திரனை அவருடன் பணி புரிந்தவர்களும், அப்பகுதியிலுள்ள குடியிருப்பு வாசிகளும் உடனே மருத்துவமனைக்கு அனுப்பியிருந்தால் காப்பாற்ற வாய்ப்பு இருந்திருக்கும். கீழே விழுந்தவரை ஒரு மணி நேரம் வரை கண்டுகொள்ளாமல் விட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்