தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin Green Milk Packet : ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை குறைக்க உத்தரவு.. பால் முகவர்கள் கடும் அவதி!

Aavin Green Milk Packet : ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தியை குறைக்க உத்தரவு.. பால் முகவர்கள் கடும் அவதி!

Divya Sekar HT Tamil
Jul 18, 2023 09:19 AM IST

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

ஆவின் பால்
ஆவின் பால்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில், ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைக்க ஆவின் நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதால் பால் முகவர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கான பால் கொள்முதல் கடுமையாக சரிவடைந்திருந்த நிலையில் புதிய பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு எடுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் ஆவினுக்கான பால் வரத்து படிப்படியாக உயர்ந்து தினசரி பால் கொள்முதலில் சுமார் 3லட்சம் லிட்டருக்கு மேல் அதிகரித்திருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதற்கு நேர்மாறாக ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை குறைக்க ஆவின் நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதால் ஒவ்வொரு மொத்த விநியோகஸ்தர்களுக்கும் அவரவர் கொள்முதல் செய்கின்ற பால் பாக்கெட்டுகளின் அளவிற்கேற்ப 10% குறைக்கப்பட்டு, அவர்கள் தரப்பில் இருந்து அதே அளவு பால் முகவர்களுக்கான பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் குறைக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.

எனவே பால்வளத்துறை அமைச்சரின் தகவலுக்கு மாறாக செயல்பட்டு வரும் ஆவின் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆவின் பால் பாக்கெட்டுகள் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய பால் முகவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்