தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்..இது ஆரோக்கியமான போக்கு இல்லை-நீதிபதிகள்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்..இது ஆரோக்கியமான போக்கு இல்லை-நீதிபதிகள்

Divya Sekar HT Tamil
Mar 27, 2023 12:32 PM IST

மதுரை ஏழுமலை கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்டம் ஏழுமலை கிராமத்தில் குறிப்பிட்ட ஆக்கிரமிப்பு பகுதியை சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து 8 வாரத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் ஆனால் ஆக்கிரமிப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் அகற்றக்கோரி அதிகாரிகள் எந்தவித நோட்டீஸும் அனுப்பப்படவில்லை,ஆக்கிரமிப்பும் அகற்றப்படவில்லை.

நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம் முடிந்ததற்கு பிறகாக ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்பு தற்போது அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்ட பிறகாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

தொடர்ச்சியாக இத்தகைய நடவடிக்கைகளை நடைபெற்று வருகிறது. இது ஆரோக்கியமான போக்கு இல்லை, எதிர்காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் வழக்குகளில் அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இந்த வழக்கினை முடித்து வைத்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்