தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nlc: நாளை என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்தால் சாலை மறியல்- எச்சரிக்கும் அன்புமணி

NLC: நாளை என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்தால் சாலை மறியல்- எச்சரிக்கும் அன்புமணி

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 28, 2023 12:54 PM IST

நாளை மீண்டும் வேலையை தொடங்கினால் ஒட்டு மொத்த கடலூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடக்கும். அடையாளத்துக்கு எல்லாம் சாலை மறியல் நடத்த கூடாது. கடலூரில் மட்டும் அல்ல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை அரியலூர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இது என்எல்சி பிரச்சனை மட்டும் கிடையாது. கடலூர் மாவட்ட பிரச்சனை, இது தமிழகத்தின் பிரச்சனை இது நம் உரிமை பிரச்சனை. தமிழகத்தில் உள்ள அனைத்து உழவர் சங்கங்களும் போராட்டத்திற்கு வராதது வருத்தம் அளிக்கிறது.

தமிழக அரசு விவசாய பட்ஜெட் போடுகிறோம் விவசாய சங்கமம் நடத்துகிறோம் என்கிறது. மறுபுறம் விவசாயிகளின் நிலத்தை பிடுங்கி காவல்துறையை வைத்து அச்சுறுத்துகிறது. இதை நிச்சயமாக விடப்போவது கிடையாது. இது மருத்துவர் அய்யாவின் கட்டளை. அந்தகாலத்தில் நாம் நிலத்திற்கு விலையை கூட்டி கொடுங்கள் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் அது 20 ஆண்டுகளுக்கு முன் நம் கோரிக்கை அன்று தமிழகம் மின் மிக மாநிலமாக இல்லை. மின் மிகை மாநிலமாக மாறி விட்டது. இன்று என்எல்சியின் தேவை இல்லை.

இன்று நான் போராட்டத்திற்கு வருவதால் நிலம் கையகப்படுத்தும் வேலையை நிறுத்தி உள்ளனர். அது போதாது. நாளை மீண்டும் வேலையை தொடங்கினால் ஒட்டு மொத்த கடலூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடக்கும். அடையாளத்துக்கு எல்லாம் சாலை மறியல் நடத்த கூடாது. கடலூரில் மட்டும் அல்ல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை அரியலூர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்