தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ntk: முதல்வர் குறித்து அவதூறு! நாம் தமிழர் தம்பியை தூக்கிய போலீஸ்!

NTK: முதல்வர் குறித்து அவதூறு! நாம் தமிழர் தம்பியை தூக்கிய போலீஸ்!

Kathiravan V HT Tamil
Jan 08, 2024 01:05 PM IST

”எப்படியும் தம்பியை பத்திரமாக மீட்டு தருவோம் என்று அண்ணன் சொன்ன வாக்குறுதியை அந்த வயதான தாயிடம் சொன்னேன். சட்ட ரீதயாக தம்பியின் விடுதலைக்கான வேலையை வழக்கறிஞர் பாசறை மேற்கொள்கிறது- நாம் தமிழர் கட்சி!”

முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் காளி என்பவர் கைது
முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் காளி என்பவர் கைது

ட்ரெண்டிங் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஆதரவாளரான காளி என்ற காளியப்பன் திமுக தலைவர்களை குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பிவருவதாக புகார் எழுந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல், பதவி உயர்வு அளிப்பதாக குற்றம்சாட்டி கார்ட்டூன் ஒன்றை பதிவேற்றி இருந்தார். 

மேலும் திமுக எம்பி கனிமொழி மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் குறித்தும் அவர் பதிவிட்ட பதிவுகளுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. 

அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்து போலீசார் சென்னை அழைத்து சென்றுள்ளனர்.  அவரை விடுவிக்க வேண்டும் என்று கூறி நாம் தமிழர் கட்சியினர் இணையதளத்தில் ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்து வருகின்றனர். 

காள் கைது குறித்து ட்வீட் செய்துள்ள நாம் தமிழர் கட்சி செய்தித் தொடர்பாகர் பாக்கியராஜன், சீமான் அண்ணன் அறிவுறுத்தலின் பெயரில் தம்பி காளியின் தாயிடம் பேசினேன்.. எப்படியும் தம்பியை பத்திரமாக மீட்டு தருவோம் என்று அண்ணன் சொன்ன வாக்குறுதியை அந்த வயதான தாயிடம் சொன்னேன். சட்ட ரீதயாக தம்பியின் விடுதலைக்கான வேலையை வழக்கறிஞர் பாசறை மேற்கொள்கிறது என பதிவிட்டுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்