தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’காருக்கு டீசல் கட்சி தருகிறது, வீட்டு வாடகையை நண்பர்கள் தருகிறார்’ அண்ணாமலை

’காருக்கு டீசல் கட்சி தருகிறது, வீட்டு வாடகையை நண்பர்கள் தருகிறார்’ அண்ணாமலை

Kathiravan V HT Tamil
Apr 14, 2023 10:52 AM IST

மாதம் அரசியல் வாதியாக 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த செலவை எப்படி தனி ஆளாக சமாளிக்க முடியும் - அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை
அண்ணாமலை

ட்ரெண்டிங் செய்திகள்

அதில் பேசிய அவர், வனவாசம் புத்தக்கத்தில் ”பழக்கூடை தனியாக இருப்பதை பார்த்துவிட்டு திருடலாமா?” என்று கண்ணதாசனை பார்த்து கருணாநிதி கேட்டார். அப்போது ஆரம்பித்தது 1967-இல் ஆட்சிக்கு வந்து தற்போது அடுத்தக்கட்ட உச்சத்தை எட்டி உள்ளது.

என்னுடைய கைக்கடிகாரம் கட்டி உள்ளேன் பில் கொடுங்கள் என்று ஆரம்பித்தது. பெங்களூருவில் வேலை பார்த்தபோது பெறப்பட்ட லஞ்சப்பணத்தில் வாங்கினேன் என்றார்கள். அப்போது திமுகவுக்கு ஒரு சவால் விடுத்தேன். ஏப்ரல் 14ஆம் தேதி இந்த பில் கொடுக்கும் போது திமுகவுக்கு ஒரு சில கேள்விகளையும் கேட்கவுள்ளேன் என்றேன்.

இன்று சாமானிய மனிதனாக நான் கேள்விக்கேட்க உள்ளேன். இன்றைக்கு நான் பேசிய கருத்துக்களுக்கான பதிலை ஒருவாரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுவேன். நான் சொல்லும் கருத்துக்களை ஒருவாரம் நேரம் எடுத்து ’க்ராஸ் செக்’ செய்யுங்கள் அதன்பிறகு ஒருவாரம் கழித்து அதை குறித்து பேசுகிறேன்.

அரசியலில் முதல் தலைமுறை சாமானியாக இருந்தால் சந்திக்கும் சவால்கள் அதிகம். என்னை பாதுகாக்க யாரும் இல்லை, என்னை பாதுகாத்து அரசியலில் அழைத்து செல்லவும் யாரும் இல்லை.

மாதம் அரசியல் வாதியாக 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த செலவை எப்படி தனி ஆளாக சமாளிக்க முடியும். சுற்றி இருக்கும் நண்பர்கள் உதவி, கட்சியினர் உதவியை வைத்து நடத்தி வருகிறேன். எனது மூன்று பி.ஏக்களுக்கு எனது நண்பர்கள்தான் சம்பளம் கொடுத்து வருகிறார்கள். காருக்கு டீசல் கட்சி கொடுக்கிறது. சிஆர்பிஎஃப் பாதுகாப்புக்கு பிறகு வீடு மாற்றியதால் அதற்கான வாடகை வேறு ஒருவர் கொடுக்கிறார். நான் பயன்படுத்தும் காரும் வேறு ஒருவருடையது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்