Top 10 News: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்..குடிநீரை வீணாக்கினால் அபராதம் - டாப் 10 செய்திகள் இதோ..!-morning top 10 news on march 26 2024 - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்..குடிநீரை வீணாக்கினால் அபராதம் - டாப் 10 செய்திகள் இதோ..!

Top 10 News: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்..குடிநீரை வீணாக்கினால் அபராதம் - டாப் 10 செய்திகள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Mar 26, 2024 07:17 AM IST

Morning Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான இன்றைய முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
  • தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று (மார்ச் 26) தமிழ் மற்றும் இதர மொழிப்பாட தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வை 12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் எழுதுகிறார்கள். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். 4 ஆயிரத்து 107 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.
  • தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், "பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் தரப்படுவதாகவும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதை தேர்வாக மட்டும் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெற வேண்டும்." என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
  • ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகிறது.
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதையொட்டி மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவுறுத்தல்.
  • விமானப்படை துல்லியமாக சுட்டு வீழ்த்தக் கூடிய ZU-23 ரக துப்பாக்கியை சோதனை செய்த இந்திய ராணுவம் - வானில் பறக்க விடப்பட்ட சிறிய இலக்கினை பகல் மற்றும் இரவு நேரத்திலும் வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
  • சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்த உத்தரவிடக்கோரும் வழக்கில், அடுத்த மாதம் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொது தீட்சிதர் குழுவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
  • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் கிடைத்த முடிவுதான் வயநாடு தொகுதியில் இந்த முறை கிடைக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுரேந்திரன் கூறியுள்ளார்.
  • அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வரும் ஜூன் 20 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி தெரிவித்துள்ளார்.
  • பெங்களூருவில் குடிநீரை வீணாக்கியதாக 22 குடும்பங்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் கார் கழுவுதல், வீட்டுத்தோட்டத்துக்கு குடிநீரை பயன்படுத்தியதாக அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.