தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rasipuram : ராசிபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி.. விவசாயி வேதனை!

Rasipuram : ராசிபுரம் அருகே தெரு நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி.. விவசாயி வேதனை!

Divya Sekar HT Tamil
Feb 26, 2023 02:24 PM IST

ராசிபுரம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தெரு நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி
தெரு நாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

ட்ரெண்டிங் செய்திகள்

அங்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. அங்கு மர்ம விலங்கு கடித்ததில் பட்டியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்து கிடந்தது. மேலும் 20-க்கும் மேற்ப்பட்ட ஆடுகள் காயம் அடைந்தன. ஆடுகள் இறந்து கிடப்பதை கண்ட புகழேஸ்வரன் அதிர்ச்சி அடைந்தார்.

தகவலின் பேரில் பட்டணம் பேரூராட்சி சுகாதாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த நாய்கள் ஆடுகளை கடித்துக்கொன்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சுகாதாரத்துறையினர் உத்தரவின் பேரில் ஆடுகள் குழி தோண்டி புதைக்கப்பட்டன. மேலும், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சமபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல நேற்று முன்தினம் சேலத்திலும் மர்மவிலங்கு கடித்து 5 ஆடுகள் பலியாகின. சேலம் மேச்சேரி அருகே பட்டியில் புகுந்து மர்ம விலங்கு கடித்ததில் 5 ஆடுகள் இறந்து போனது. மேலும் அங்கிருந்த சில ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு ஆட்டை முழுமையாக மர்ம விலங்கு தின்று விட்டது. மேலும் 5 ஆடுகள் கடிபட்டு உயிருக்கு போராடின.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி மற்றும் வருவாய்த்துறை யினர், கால்நடை மருத்துவர்கள் படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து வனத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இப்பகுதியில் ஆட்டுப்பட்டிகளில் புகுந்த மர்ம விலங்கு ஏராளமான ஆடுகளை கடித்து கொன்றுள்ளது.

\வனத்துறை அதிகாரிகள் ஆடுகளை கடிப்பது எந்த விலங்கு என்று கண்டுபிடித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்