தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mayor Priya Rajan Presented The Budget For The Financial Year 2023-24 Of The Chennai Municipal Corporation

PTR-க்கு டஃப் கொடுக்கும் பிரியா ராஜன்! சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள்!

HT Tamil Desk HT Tamil
Mar 27, 2023 05:01 PM IST

Mayor Priya Rajan:- ’மக்களை தேடி மேயர்’ என்ற திட்டம் மூலம் நேரடியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க மேயர் பிரியா ராஜன் திட்டம்

சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வாசிக்கும் மேயர் பிரியா ராஜன்
சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வாசிக்கும் மேயர் பிரியா ராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

பட்ஜெட் வாசிப்பதற்கு முன்னதாக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மேயர் பிரியா ராஜன்
பட்ஜெட் வாசிப்பதற்கு முன்னதாக முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற மேயர் பிரியா ராஜன்

பட்ஜெட் அறிவிப்புகள்

’மக்களை தேடி மேயர்’ என்ற திட்டம் மூலம் பொதுமக்கள் மேயரிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம்

கவுன்சிலர்கள் வார்டு மேம்பாட்டு நிதி 35 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்வு

சென்னை பள்ளிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்

11ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலாவாக தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்து செல்லப்படும்

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு carrer guidance programme நடத்தப்படும்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக கற்றல் பயிற்சி வழங்கப்படும்

கலைத்திருவிழா போன்ற இசைப்போடிகளில் பர்சுகளை வென்று முன்னிலையில் இருக்கும் மாநகராட்சி பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளுக்கு இசைக்கருவிகள் வழங்கப்படும்

ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் காலை இறைவணக்கக் கூட்டத்தை ஆங்கிலத்தில் நிகழ்த்த அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பினை வழங்கி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் புலமையை மேம்படுத்துவது மட்டுமில்ன்றி தலைமை பன்மையும் உயர்த்த வழிவகை செய்யப்படும்

10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை 3000 ரூபாயாக உயர்வு

10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் கல்வி சுற்றுலாவாக ஐஐடி-மெட்ராஸ், ஐஐஎம்-பெங்களூரு, டெல்லி பல்கலைக்கழ்கம் அழைத்து செல்லப்படுவர்

சென்னை பள்ளிகளில் பயின்று மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று JEE, CLAT, NEET, ஆகிய தேர்வுகளில் வென்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாமாண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சியே செலுத்தும்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் முழு தொகுப்பு

பொது சுகாதாரம்

கொசு ஒழிப்பு மற்றும் கொசுப்புழு தடுப்பு பணிகளை செய்யும் தொழிலாளர்களுக்கு 35 லட்சம் மதிப்பில் Vector Control Kit வழங்கப்படும்

ரேபீஸ் நோய் இல்லா சென்னை மாநகரம் என்ற இலக்கை அடைய 6 நாய் பிடிக்கும் வாகனங்கள் மற்றும் சாலைகளில் சுற்றூம் மாடுகளை பிடிக்க 5 வாகனங்களை வாங்க 1.35 கோடி ஒதுக்கீடு

பெருநகர சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் “மஞ்சப்பை” வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும்

என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

”மக்களை தேடி மேயர் திட்டம்”

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாதம் ஒரு முறை வட்டார அலுவலகங்களில் இந்த மக்களை தேடி மேயர் திட்டத்தின் கீழ் மனுக்களை நேரடியாக பெரும் திட்டம் செயல்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் வசிப்போர் தங்கள் பகுதிகளில் இருக்கும் குறைகளை குறிப்பிட்டு விரைவாக தீர்வுகளை பெற முடியும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்