தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா - ஒடுக்கு பூஜையுடன் கோலாகலமாக நிறைவு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா - ஒடுக்கு பூஜையுடன் கோலாகலமாக நிறைவு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 15, 2023 01:08 PM IST

Mandaikadu Bhagavathi Amman Temple Festival:பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா நிறைவு விழாவான ஒடுக்கு பூஜையுடன் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

ஒடுக்கு பூஜைக்கான படையலுடன் கோயிலுக்குள் வரும் பூசாரிகள்
ஒடுக்கு பூஜைக்கான படையலுடன் கோயிலுக்குள் வரும் பூசாரிகள்

இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் மாலை 6 மணிக்கு தங்கதேர் உலா, 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 9 மணிக்கு அத்தாழி பூஜை, இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் போன்றவை நடந்தது.

நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவசம் மலே நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தா கோயிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண்பனைகள் மற்றும் பெட்டிகளில் வைத்து பூசாரிகள் அதனை கோயிலுக்கு பவனியாக கொண்டுவந்தனர். இவற்றுடன் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.

வாயில் சிவப்பு துணியை கட்டியவாறு மேற்கூறிய பதார்த்தங்களை பூசாரிகள் தலையில் சுமந்து வந்தனர். உணவு பதார்த்தங்கள் வெள்ளை துணியால் போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஓடுக்கு பவனி கோயிலை வலம் வந்த பிறகு பதார்த்தங்கள் அம்மன் முன்பு இறக்கி வைக்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விழாவை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலில் தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

கடந்த 5ஆம் தேதி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா தொடங்கியது கொடியேற்றத்துடன். இதையடுத்து கணபதி ஹோமம், உஷா பூஜை, அத்தால பூஜை, வலியை படுக்கை பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், சந்தனகுடம் ஊர்வலம், பால்குடம் ஊர்வலம், பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலம் ஆகியவை முதல் ஒன்பது நாள்களில் நடைபெற்றது.

இதன் பின்னர் விழாவின் 10வது மற்றும் இறுதி நாளில் ஒடுக்கு பூஜை திராளமான பக்தர்கள் பங்கேற்க கோலகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்