தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘Ttf வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! ஆனால் அங்கதான் ட்விஸ்டே!’

‘TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! ஆனால் அங்கதான் ட்விஸ்டே!’

Kathiravan V HT Tamil
Nov 01, 2023 11:48 AM IST

”டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாலும் ஜாமீன் தர வேண்டுமென அவரது தரப்பில் வாதம்”

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் பைக் வீலிங் செய்த பிரபல பைக் ரைடர் டிடிஎஃப் வாசன் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அவரது வாகனம் சாலையோர தடுப்பில் மோதி பறந்து விழுந்தது. இதில், டிடிஎஃப் வாசனின் கை உடைந்தது. நல்வாய்ப்பாக, சிறு காயங்களுடன் டிடிஎஃப் வாசன் உயிர் தப்பித்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். டிடிஎஃப் வாசன் விபத்திற்குள்ளகுன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரைல் ஆன நிலையில் பெரும் பேசுபொருளானது.

டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கீழமை நீதிமன்றத்தில் அவரின் ஜாமீன் மனு 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

கடந்த முறை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் ஏன் இவரது வாகனத்தை எரிக்க கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கேட்டு மீண்டும் டிடிஎஃப் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின்போது டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ளதாலும் ஜாமீன் தர வேண்டுமென அவரது தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

வாதத்தை கேட்ட நீதிபதி, டிடிஎஃப் வாசன் அடுத்த மூன்று வாரம் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை உடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்