தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ks Alagiri: தமிழ்நாடு காங்கிரஸ்க்கு புதிய தலைவர்? மாற்றப்படுகிறாரா கே.எஸ்.அழகிரி! டெல்லிக்கு அவசர பயணம்!

KS Alagiri: தமிழ்நாடு காங்கிரஸ்க்கு புதிய தலைவர்? மாற்றப்படுகிறாரா கே.எஸ்.அழகிரி! டெல்லிக்கு அவசர பயணம்!

Kathiravan V HT Tamil
Jun 26, 2023 10:31 AM IST

வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் புதிய நிர்வாகிகள் நியமனத்தை முடிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி- கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி- கிருஷ்ணகிரி எம்.பி செல்லக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாடு காங்கிர கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில தலைமைகளை மாற்றுவதை காங்கிரஸ் கட்சி வழக்கமாக கொண்டுள்ளது.

கே.எஸ்.அழகிரி தலைமையில்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை காங்கிரஸ் கட்சி சந்தித்தது.

இந்த அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியுடன் இணைந்து அமோக வெற்றி பெற்றதால் தலைமை மாற்றம் பற்றி காங்கிரஸ் டெல்லி மேலிடம் பரிசீலிக்காமல் இருந்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில காங்கிரஸ் தலைமைகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்து அகில இந்திய தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் புதிய நிர்வாகிகள் நியமனத்தை முடிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் கே.எஸ்.அழகிரியில் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமை பதவியை நீட்டிக்க கோரி தலைமையிடம் வலியுறுத்த கே.எஸ்.அழகிரி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கிருஷ்ணகிரி எம்.பியாக உள்ள செல்லக்குமார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

’மேலிடத் தலைமை வாய்ப்பளிக்கும் பட்சத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பை ஏற்று செயல்பட தயாராக உள்ளதாக’ சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பமும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில் இந்த தலைமை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்