தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நாட்டிலேயே முதன்முறையாக ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை திறப்பு: எங்கு தெரியுமா?

நாட்டிலேயே முதன்முறையாக ரயில் நிலையத்தில் கருவாட்டு கடை திறப்பு: எங்கு தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Feb 13, 2023 11:59 AM IST

Karuvadu Shop in Madurai Junction: நாட்டிலேயே முதன் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனைகம் திறக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனைகம் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனைகம் திறக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

மதுரை ரயில் நிலையத்தில் தற்போது சுங்குடி சேலை, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சின்னாளப்பட்டி கைத்தறி சேலைகள், தூத்துக்குடியில் மக்ரூன், ராமேஸ்வரத்தில் கடல் பாசி பொருட்கள், விருதுநகரில் சாத்தூர் காராச்சேவு, கோவில்பட்டியில் கடலை மிட்டாய், தென்காசியில் மூங்கில் பொருட்கள் போன்றவை இந்த விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து மதுரை ரயில் நிலையத்தின் உட்புறம் இந்தியாவிலேயே முதன்முறையாக கருவாடு விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது. மண்டபம் பகுதியைச் சேர்ந்த புதுமைப் பெண்கள் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் இந்த விற்பனை நிலையம் மதுரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 

மகளிர் சுயஉதவிக குழுவைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து, தங்கள் மாவட்டத்தின் பிரபலமான கருவாட்டை தயாரித்து இங்கு விற்பனை செய்து வருகின்றனர். நாட்டிலேயே முதல் முறையாக ரயில் நிலையத்தில் கருவாடு விற்பனையகம் மதுரை ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக கருவாட்டின் வாடை அதிகளவில் இருக்கும். ஆனால், கருவாடு வாடையின்றி அனைத்துமே முறையான பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்