தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Kamal Released The Drug-free Tamil Nadu Campaign Board

No To Drugs: போதையற்ற தமிழகம்: உற்சாகமாக கையெழுத்திட்ட கமல்ஹாசன்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 16, 2023 01:24 PM IST

மதப்பிரச்சாரம் செய்கிறவர்கள், கோவில், தேவாலயம், மசூதிகளில் உள்ள ஓதுவார்கள், பிரசங்கம் செய்கிறவர்கள் என எல்லோரையும் ஒன்றுபடுத்தி இந்த போராட்டத் தை வாலிபர் சங்கம் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

போதைக்கு எதிரான பிரச்சார பதாகையை வெளியிட்ட கமல்
போதைக்கு எதிரான பிரச்சார பதாகையை வெளியிட்ட கமல்

ட்ரெண்டிங் செய்திகள்

போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்கக் கோரி ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தை விடுதலைப் போராட்ட வீரரும், முது பெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மலிவாக கிடைக்கிறது. மாநில அரசு மது பான கடைகளை படிப்படியாக மூட வேண்டிய தேவை உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பபழக்கம் அதிகரித்து வருவதால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இந்நிலையில், போதைப் பழக்கத்திலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாக்கவும், ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்கவும் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு கோடி கையெழுத்து பெறும் பிரச்சார இயக்கம் ஞாயிறன்று (பிப்.12) தொடங்கியது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், செயலாளர் ஏ.வி.சிங்கார வேலன் ஆகியோரிடம் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை சுதந்திர போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார். அப்போது, ‘‘திறமை வாய்ந்தவர்கள், சிறப்பாக சிந்திக்கக்கூடியவர்கள் பலரும் போதையால் அழிந்துவிடுகின்றனர். பிற பிரச்சனைகளோடு ஒப்பிடும் போது பிரதான பிரச்சனையாக போதை உள்ளது. போதைப் பழக்கம் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும், நாட்டை அழிக்கும் முக்கிய பிரச்சனை. இதில் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், மதப்பிரச்சாரம் செய்கிறவர்கள், கோவில், தேவாலயம், மசூதிகளில் உள்ள ஓதுவார்கள், பிரசங்கம் செய்கிறவர்கள் என எல்லோரையும் ஒன்றுபடுத்தி இந்த போராட்டத் தை வாலிபர் சங்கம் முன்னெடுத்து செல்ல வேண்டும். கல்வி வளாகங்களிலும், கிராமப்புற கல்வி நிலையங்களில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். போதை ஒழிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் சங்கரய்யாவைத் தொடர்ந்து இயக்குநர்கள் வெற்றிமாறன், சசிகுமார் ஆகியோர் போதை ஒழிப்புக்காகக் கையெழுத்திட்டனர். இந்நிலையில் நேற்று நடிகர் கமல் ஹாசனிடம் வாலிபர் சங்க நிர்வாகிகள் போதை ஒழிப்புக்காக கையெழுத்து பெற்றனர்.

சென்னையில் இவ்வியக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு, திரைக்கலைஞர் கமல்ஹாசன் கையெழுத்திட்டு, பிரச்சார பதாகையை வெளியிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்