தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi: 2 ஆண்டுகளில் 60 மரணங்கள்! இனியும் முதல்வராக தொடர வேண்டுமா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Kallakurichi: 2 ஆண்டுகளில் 60 மரணங்கள்! இனியும் முதல்வராக தொடர வேண்டுமா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Kathiravan V HT Tamil
Jun 20, 2024 12:49 PM IST

Kallakurichi Liquor Deaths: கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச் சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்வீட்

Kallakurichi: 2 ஆண்டுகளில் 60 மரணங்கள்! இனியும் முதல்வராக தொடர வேண்டுமா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
Kallakurichi: 2 ஆண்டுகளில் 60 மரணங்கள்! இனியும் முதல்வராக தொடர வேண்டுமா? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

கள்ளசாராயம் அருந்தி 35 பேர் உயிரிழந்து இருக்க கூடிய நிலையில் இனியும் முதலமைச்சராக தொடர வேண்டுமா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ள இடுகையில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.