Trichy Surya Siva: பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மீண்டும் டிஸ்மிஸ்.. கல்யாணராமன் பதவியும் பறிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Trichy Surya Siva: பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மீண்டும் டிஸ்மிஸ்.. கல்யாணராமன் பதவியும் பறிப்பு!

Trichy Surya Siva: பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மீண்டும் டிஸ்மிஸ்.. கல்யாணராமன் பதவியும் பறிப்பு!

Karthikeyan S HT Tamil
Jun 21, 2024 06:25 PM IST

TN BJP, Trichy Surya Siva: பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி S. சூர்யா அதிரடி நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓராண்டு நீக்கப்பட்டுள்ளார்.

TN BJP: பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மீண்டும் டிஸ்மிஸ்.. கல்யாணராமன் பதவியும் பறிப்பு!
TN BJP: பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா மீண்டும் டிஸ்மிஸ்.. கல்யாணராமன் பதவியும் பறிப்பு!

திருச்சி சூர்யா மீண்டும் நீக்கம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:"இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி S.சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்யாணராமன் நீக்கம்

அதேபோல் பாஜகவில் மற்றொரு நிர்வாகி கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஓராண்டுக்கு நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜகவின் மாநில அலுவலக செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.

ஓராண்டு நீக்கம்

இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி கல்யாணராமன் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றுமு் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.

வைரல் ஆடியோ

முன்னதாக, தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதன்படி, திருப்பூர் பாஜக அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மீண்டும் பாஜகவில் இணைந்த திருச்சி சூர்யா

அதனைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், "சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததின் அடைப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார். தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், திருச்சி சூர்யா ஏற்கெனவே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.