தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tasmac Liquor Price Hike: டாஸ்மாக் கடைகளில் 18 வகையான மதுபானங்கள் விலை உயர்வு

TASMAC Liquor Price Hike: டாஸ்மாக் கடைகளில் 18 வகையான மதுபானங்கள் விலை உயர்வு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 20, 2023 06:54 AM IST

டாஸ்மாக் மதுபான கடைகளில் 18 வகையான மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 10 முதல் ரூ. 320க்கும் மேல் இந்த விலை உயர்வானது உள்ளது.

டாஸ்மாக்கில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை அதிகரிப்பு
டாஸ்மாக்கில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை அதிகரிப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

அதன்படி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின், பீர் பாட்டில்களின் விலை ரூ. 10 முதல் ரூ. 320 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை தற்போது அமலுக்கு வந்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெட்மென் பில்சென்னர் பீர், ஸ்காட்ச் விஸ்கி, வோட்கா உள்பட 18 வகை வெளிநாட்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், கூலிங் பீர் என ஒவ்வொரு விதமான மது பாட்டில்களுக்கும் கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவதாக மது பிரியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை பாயும் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், "மதுக்கடைகளில் மதுபானங்களை நிர்ணயித்த விலையைவிட கூடுதலாக 10 ரூபாய் அல்லது அதற்கும் மேல் வசூலித்து விற்பனை செய்தால் கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணி நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களின் விலை உயர்வு செய்யப்பட்டிருப்பது குடிமகன்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்