தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Free Petrol: 100 திருக்குறள் தெரியுமா ? அப்போ 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்

Free Petrol: 100 திருக்குறள் தெரியுமா ? அப்போ 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்

Karthikeyan S HT Tamil
Feb 26, 2023 01:01 PM IST

Thirukural Competition: திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

நெல்லை, சுத்தமல்லி பங்கில் திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.
நெல்லை, சுத்தமல்லி பங்கில் திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் திருவள்ளுவர் கழகத்தின் 6 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி விலக்கில் உள்ள ஆறுமுகம் ஏஜென்சி பெட்ரோல் பங்க் நிர்வாகத்துடன் இணைந்து திருக்குறள் ஒப்புவிக்கும் நபர்களுக்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

100 திருக்குறள் கூறும் நபருக்கு ஒரு லிட்டர் பெட்ரோலும், 50 திருக்குறள் கூறும் நபருக்கு அரை லிட்டர் பெட்ரோலும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை இந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுத்தமல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பல இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று திருக்குறளை ஒப்பித்தனர். 

பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோருடன் வாகனத்துடன் சென்று திருக்குறளை சொல்லி இலவசமாக பெட்ரோல் வாங்கிச் சென்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர் மலைக்கண்ணன் சார்பில் இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.

உலக பொதுமறையாம் திருக்குறளை பொது மக்கள், மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு சமூக நோக்கத்தின் முன்னெடுப்பாக திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய இந்த நிகழ்ச்சி சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை:

சென்னையில் இன்று (பிப்ரவரி 26) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன் மூலம் 281-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்