தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mk Stalin: ’ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் யாரும் கட்சி நடத்த முடியாது’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MK Stalin: ’ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் யாரும் கட்சி நடத்த முடியாது’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Kathiravan V HT Tamil
Sep 03, 2023 11:38 AM IST

”இந்தியா என்று சொன்னாலே பாஜகவுக்கு பயம் வர தொடங்கிவிட்டது. இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்களை பார்த்து அஞ்சி நடுங்கியதால் பாஜக திடீரென்று கூட்ட உள்ளதாக அறிவித்து உள்ளார்கள்”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நாட்டிற்கு ஏற்பட்டிருக்கிற நிலையை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது தமிழ்நாட்டை காப்பற்ற வேண்டும் என்ற உறுதி உடன் நீங்கள் உணர்ந்து திமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தீர்களோ அதே போல் இந்தியாவை காப்பற்றவும் அவசியம் ஏற்பட்டு உள்ளது.

யார் பிரதமராக வர வேண்டும். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்தான் நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று நான் தொடந்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

இந்தியா என்று சொன்னாலே பாஜகவுக்கு பயம் வர தொடங்கிவிட்டது. இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்களை பார்த்து அஞ்சி நடுங்கியதால் பாஜக திடீரென்று கூட்ட உள்ளதாக அறிவித்து உள்ளார்கள்.

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலை எப்படி செல்படுத்துவது என்பதை அறிய அமைக்கப்பட்ட குழுவுக்கு இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்தவரை தலைவராக நியமித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள திமுகவுக்கு கூட அக்குழுவில் இடம் இல்லை. தங்களுக்கு வேண்டியதை சாதிக்கும் நோக்கோடு ஒரு கமிட்டி அமைத்துள்ளனர்.

ஒரே நாடு ஒரே தேர்தலை ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபோது எதிர்த்தது. ஆனால் தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக அதனை ஆதரிக்கிறது. தான் பலிகடா ஆகப்போகிறோம் என்பது ஆட்டுக்கு தெரியாது என்பது போல் அதிமுகவும் உள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறினால் திமுக மட்டுமல்ல; எந்த அரசியல் கட்சியும் நாட்டில் நடத்த முடியாது. ஒரே நாடு ஒரே தலைவன் என்று அறிவித்துவிட்டு சென்றுவிடலாம்.

2021இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடந்த இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. இந்த அரசின் பதவிக்காலம் இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளது. இதேபோல் கேரளா, மேற்கு வங்கத்திலும் இரண்டரை ஆண்டுகளுக்கு ஆட்சிக்காலம் உள்ளது.

தேர்தல் செலவுகளை குறைப்பதற்காக இதனை செய்வதாக கூறுகிறார்கள். நீங்கள் தேர்தல் செலவை குறைக்கிறீர்களோ இல்லையோ முதலில் கொள்ளை அடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.

சிஏஜி அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்றால் வரும் நாடளுமன்றத் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற நாம் இன்றைக்கே தயாராக இருக்க வேண்டும் என முதலமைச்சர் பேசினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்