தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Holiday Tips: ‘கோவையில் இருந்து 1:30 மணி நேரத்தில் ‘பீச்’ சுற்றுலா’ ஒரே நாளில் ‘ஓஹோ’ டூர்!

HT Holiday Tips: ‘கோவையில் இருந்து 1:30 மணி நேரத்தில் ‘பீச்’ சுற்றுலா’ ஒரே நாளில் ‘ஓஹோ’ டூர்!

Stalin Navaneethakrishnan HT Tamil
May 08, 2023 10:46 AM IST

Chavakkad Beach: கோடை விடுமுறையில் உங்கள் குடும்பத்தோடு பட்ஜெட் சுற்றுலா செல்ல சில இடங்களை அடையாளப்படுத்தும் முயற்சி இது!

ஜவக்காடு கடற்கறை சுற்றுலா
ஜவக்காடு கடற்கறை சுற்றுலா

ட்ரெண்டிங் செய்திகள்

எப்போதுமே கோவையும், அதை சுற்றி இருக்கும் பகுதிகளும் குளுகுளுப்பானவை. மலைவாழ் பகுதிகளை அதிகம் கொண்டவை. அதற்காக கோவைக்கு பலர் படையெடுப்பதுண்டு. ஆனால், கோவைவாசிகள் கடற்கரை சுற்றுலாவை ரசிக்க விரும்பினால், அவர்களுக்கு ஜவக்காடு கடற்கரை சுற்றுலா தகுந்த இடமாக இருக்கும். 

எவ்வளவு தூரம்?

கோவையிலிருந்து 150 கி.மீ., தூரத்தில் அமைந்திருக்கிறது ஜவகாடு பீச். கார், பைக் என நீங்கள் விரும்பும் பயணத்தை மேற்கொள்ளும் வகையிலான தூரம் தான்.2 முதல் 2:30 நேரத்தில் நீங்கள் ஜவகாடு கடற்கரைக்கு செல்ல முடியும். வழிநெடுகிலும் அழகி சூழல் நிறைந்த இந்த பயணத்தில், 900 மீட்டர் தூரத்திற்கு குகை சாலையை கடக்கும் அற்புதமான அனுபவமும் கிடைக்கும்.  அதுவே தனி டூர் என்பது வேறு கதை. 

அழகான கடற்கரை சுற்றுலா!

கேரளாவில் திருச்சூர் அருகில் தான் இந்த ஜவகாடு பீச் உள்ளது. சாலையை ஓட்டியே அமைந்திருக்கும் இந்த பீச்சில், நீங்கள் வரும் வாகனத்திற்கு ரூ.10 ல் பார்க்கிங் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.  மற்றபடி பீச் சுத்தமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும். படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு ஆக்டிவிட்டிஸ் இடம் பெற்றிருக்கும். விருப்பத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். சூரியனின் தோற்றம், மறைவு இரண்டுமே இங்கு ரசிக்கும் படியாக இருக்கும் என்கிறார்கள். 

குடும்பங்களுக்கு ஏற்ற சுற்றுலா!

மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற இந்த கடற்கரை சுற்றுலா, ஒரு நாள் சென்று வர சரியான தேர்வு ஆகும். கடற்கரையில் வெளியில் எல்லா விதமான கடைகளும் உள்ளன. ஓட்டல்கள் உள்ளன. பிறந்தநாள் உள்ள கொண்டாட்டங்களுக்கு சரியான தேர்வு இந்த பீச். குடும்பத்தோடு ‘பீச் வாக்’ செல்ல இதை விட சிறந்த பீச் இருக்காது. பெரிய கெடுபிடி இல்லாமல், சுதந்திரமாக பாதுகாப்பாக விடுமுறையை கொண்டாட, ஜவக்காடு பீச், செம்மயான இடம். 

பட்ஜெட் சுற்றுலா!

போக்குவரத்து செலவை தவிர பெரிய அளவில் இங்கு செலவு இல்லை. உணவு உள்ளிட்ட அனைத்தும் நியாயமான விலையில் கிடைப்பதால் அந்த செலவும் குறைவு தான். விடுதிகளில் தங்கினாலும் அதுவும் பொருத்தமான கட்டணத்தில் தான் கிடைக்கிறது. பெரிய ஆர்ப்பரிப்பு இல்லாத, குறைந்த அளவிலான மக்கள் எண்ணிக்கையில் சுற்றி ரசித்த ஏற்ற இடமாக, குறிப்பாக இந்த கோடை விடுமுறையில் குதூகலிக்க ஜவக்காடு பீச் நல்ல தேர்வு!

IPL_Entry_Point

டாபிக்ஸ்