தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Govt Music College : அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிப்பது எப்படி? தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை – இரு விவரங்கள் உள்ளே!

Govt Music College : அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிப்பது எப்படி? தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை – இரு விவரங்கள் உள்ளே!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2023 09:47 AM IST

Govt Music College : சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கல்வி உதவித் தொகையுடன் இசை பயில விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம்.

மூன்று ஆண்டு கால பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சேர்க்கைக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை அளிக்கப்படுகிறது.

இசைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி

உதவித்தொகையாக மாதம் ரூ. 400 வழங்கப்படுகிறது. இசைப் பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப் பள்ளி, ஆவின் பால் பண்ணை எதிரில், தளவாய்பட்டி - திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம் - 636302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுய முகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பியோ விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0427-2906197, 94435 39772, 9994738883 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் – வரும் 12ம் தேதி நடக்கிறது

தர்மபுரி கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் –

தேசிய தொழிற்பழகுனர் சேர்க்கை முகாம் தர்மபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுனர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளன. என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி. முறையில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐ.டி.ஐ.ல் கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களும் கலந்துகொள்ளலாம்.

இதுவரை ஐ.டி.ஐ. பயிற்சி முடித்து தொழிற்பழகுனர் பயிற்சி பெறாதவர்களும், தொழில் பழகுனர் பயிற்சி பெற தயார் நிலையில் உள்ளவர்களும், இந்த முகாமில் அசல் கல்வி சான்றிதழ்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு தர்மபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை தொடர்புகொள்ளலாம்.

எனவே தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்