தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sanathanam: சனாதனம் நித்திய கடமைகளின் தொகுப்பு.. அது ஒழிக்கப்பட வேண்டுமா?' உயர்நீதிமன்ற நீதிபதி சேஷ்சாயி கேள்வி!

Sanathanam: சனாதனம் நித்திய கடமைகளின் தொகுப்பு.. அது ஒழிக்கப்பட வேண்டுமா?' உயர்நீதிமன்ற நீதிபதி சேஷ்சாயி கேள்வி!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 16, 2023 12:22 PM IST

சென்னை நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

நீதிபதி
நீதிபதி

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு பாஜக உள்ளிட்ட இந்துவா அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பிரதமர் மோடி சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்குமாறு அறிவுறுத்திய தாக தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் தான் சென்னை நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி சனாதன தர்மத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்து மத வாழ்க்கை முறையில் விதிக்கப்பட்ட காலவரையற்று நிலைத்திருக்கும் கடமைகளின் தொகுப்பு கடமைகள், தேசத்தின் மக்களுக்கான கடமைகள் குருமார்களுக்கு செய்ய வேண்டிய கடமை, ஏழைகள் மீதான அக்கறை போன்றவை இதில் அடங்கி உள்ளது. இந்த கடமைகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டுமா?

மதங்களில் உள்ள மோசமான நடைமுறைகளை களையெடுக்க வேண்டுமே தவிர ஏன் வேரறுக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சனாதன தர்மம் சாதி வெறி மற்றும் தீண்டாமையையும் ஊக்குவிப்பது மட்டுமே என கருதப்படுகிறது. சனாதன கொள்கைகளுக்குள் எங்காவது தீண்டாமை அனுமதிக்கப்பட்டதாக காணப்பட்டால் ஜனநாயக நாட்டில் அதை சகிக்க முடியாது. தீண்டாமையை ஒழிக்கும் வகையில் மாணவ மாணவியரை கல்லூரிகள் ஊக்கு விக்கலாம் என நீதிபதி சேஷசாயி கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசியல் வட்டாரத்தில் சனாதன சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நீதிபதி சேஷசாயி கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்