தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Heavy Rain Continues To Next 2 Days In Chennai

Weather Update: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..சட்டென்று மாறப்போகும் வானிலை!

Karthikeyan S HT Tamil
Mar 18, 2023 01:46 PM IST

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை - கோப்புபடம்
மழை - கோப்புபடம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது தொடர்வதால், தமிழகத்தில் திடீர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 22 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், மார்ச் 22-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  எனவே இன்று (மார்ச் 18) மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்