Nilgiris : ’இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா?’ பெண் பயணியை தரக்குறைவாக பேசிய பேருந்து ஓட்டுநர் சஸ்பெண்ட்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பெண் பயணிடம் தகாத வார்த்தை பேசிய அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி, தேவாலா, பந்தலூர், உப்பட்டி, பொன்னானி, முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், முள்ளன்வயல், அம்பலமூலா, அய்யன்கொல்லிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கூடலூரில் இருந்து அய்யங்கொள்ளி பகுதிக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடலூரில் இருந்து அய்யன்கொல்லிக்கு நேற்று முன்தினம் மாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தை டிரைவர் பன்னீர் செல்வம் என்பவர் ஓட்டினார்.
இந்நிலையில் இந்த பேருந்து அய்யன்கொள்ளி பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு இருந்த பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. அங்கு பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கிட்டத்தட்ட 4 மணி நேரமாக பேருந்துக்காக காத்திருந்துள்ளார். பேருந்து வந்தும் அது அங்கு நிற்காமல் சென்றதால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார் அப்பெண்.
இதனால் கடும் கோபம் அடைந்த அப்பெண் அடுத்த நிறுத்தமான அய்யன்கொள்ளியில் பேருந்து நின்ற நிலையில் அங்கிருந்த ஜீப்பைப்பிடித்து பேருந்தை மடக்கிப்பிடித்த அப்பெண் பேருந்து ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். கைக்குழந்தையோடு 4 மணி நேரமாக காத்திருக்கிறேன். கையைக்காட்டியும் வண்டியை ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் கவனிக்கவில்லை என்று கூறியதோடு மீண்டும் அந்த இளம்பெண் அதுகுறித்து கேட்டபோது, தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாக தெரிகிறது.
நீங்க கையை எல்லாம் காட்டவில்லை. இது என்ன உங்க அப்பன் வீட்டு வண்டியா? என்று கேள்வி எழுப்பி கடுமையாக நடந்துள்ளார் ஓட்டுநர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியிட்ட நிலையில் வீடியோ வைரலாகியுள்ளது. வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், சம்மந்தப்பட்ட ஓட்டுநர் மிது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இதை அறிந்த கூடலூர் போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள்கண்ணன், ஊட்டி போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விசாரணை நடத்தி டிரைவர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9