தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gold Rate Today : அடேங்கப்பா..வியக்க வைக்கும் தங்கம் விலை..இதோ பாருங்க..

Gold Rate Today : அடேங்கப்பா..வியக்க வைக்கும் தங்கம் விலை..இதோ பாருங்க..

Divya Sekar HT Tamil
Feb 24, 2023 01:34 PM IST

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை
தங்கம் விலை

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது. 

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.41,960க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,245க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோல் ஆபரண தங்கம் சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 41,880 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.71.50க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 71 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து 70.90 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 70,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரண் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது.

24 காரட் vs 22 காரட்

தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது.

22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள்.

அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது

IPL_Entry_Point

டாபிக்ஸ்