தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அதிமுக-பாஜக மோதல்! மோடியிடம் புட்டுபுட்டு வைத்த வாசன்! அதிர்ச்சியில் கமலாலயம்!

அதிமுக-பாஜக மோதல்! மோடியிடம் புட்டுபுட்டு வைத்த வாசன்! அதிர்ச்சியில் கமலாலயம்!

Kathiravan V HT Tamil
Mar 17, 2023 11:01 AM IST

"அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் அதிமுக - பாஜக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துகிறது"

பிரதமர் மோடியை சந்தித்த ஜி.கே.வாசன்
பிரதமர் மோடியை சந்தித்த ஜி.கே.வாசன்

ட்ரெண்டிங் செய்திகள்

இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்
இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகிகள்

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாலம் 420 மலை என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்ட அறிக்கை அண்ணாமலை மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்துவதாக அமைந்தது. சிடிஆர் நிர்மல் குமார் விலகலை தொடர்ந்து மேலும் சில நிர்வாகிகளும் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இச்சம்பத்திற்கு பதிலடியாக அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து அண்ணாமலையின் வலது கரம் என கூறப்படும் பாஜக விளையாட்டு மேம்பாட்டு அணி பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி ட்வீட் செய்திருந்தார்.

’ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர் நான்’ என என கூறி அதிமுகவினரை நேரடியாக வம்புக்கு இழுத்து இருந்தார் அண்ணாமலை.

’செஞ்சி கோட்டை ஏறியவன் எல்லாம் ராஜாதேசிங்கு இல்லை; மீசை வைத்தவன் எல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிவிட முடியாது’ என பதிலடி கொடுத்திருந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை மாவட்ட பாஜக இளைஞரணி தலைவர் எரித்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஈபிஎஸ் படத்தை எரித்த பாஜகவினர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஈபிஎஸ் படத்தை எரித்த பாஜகவினர்

இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து தினேஷ் ரோடி 6 மாதங்களுக்கு விலக்கி வைக்கப்படுவதாக அறிக்கை வெளியான நிலையில், மறுநாளை காலையில் இந்த உத்தரவு வாபஸ் பெறபடுவதாகவும் கட்சி சார்பில் அறிக்கை வெளியானது.

அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இச்சம்பவத்தை பெரும் தலைவலியாக கருதி இதனை சரிகட்டும் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது பாஜக தலைமை.

கடந்த 13ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர் தம்பிதுரை எம்பியை அழைத்து தனியாக பேசி உள்ளர் பிரதமர் நரேந்திரமோடி.

தம்பிதுரை, அதிமுக எம்.பி
தம்பிதுரை, அதிமுக எம்.பி

பின்னர் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசி உள்ளார். திமுக ஆட்சி, தமிழ்நாடு அரசியல், அதிமுக-பாஜக மோதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் விரிவாக பேசி உள்ளாராம் ஜி.கே.வாசன்.

அண்ணாமலையின் அரசியல் செயல்பாடுகள் அதிமுக - பாஜக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்துகிறது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் இந்த சர்ச்சை தேவை இல்லாதது என்று அண்ணாமலைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை புட்டுபுட்டு வைத்துள்ளாராம் ஜி.கே.வாசன்.

பிரதமர் மோடி - ஜி.கே.வாசன் சந்திப்பு வார் ரூமில் உள்ள சில புள்ளிகளுக்கு புளியை கரைக்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. பாஜகவில் இனி எத்தனை தலைகள் உருளப்போகுதோ என எதிர்ப்பார்ப்புடன் சிலர் காத்திருப்பதாக கூறுகின்றனர் கமலாலய காவிச்சொந்தங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்