தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai Corporation : வரும் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு காத்திருக்கிறது சென்னை மாநகராட்சியின் பரிசு

Chennai Corporation : வரும் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு காத்திருக்கிறது சென்னை மாநகராட்சியின் பரிசு

Priyadarshini R HT Tamil
Apr 18, 2023 11:32 AM IST

chennai Corporation Property Tax : 2023- 2024 நிதியாண்டின் அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தினால், ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறித்து, பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :

பெருநகர சென்னை மாநகராட்சி சட்டப்படி அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்துவரி செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு 15 நாட்களுக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வழங்கப்படும். அதன்படி. ஏப்ரல் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 4 லட்சத்து 89 ஆயிரத்து 794 சொத்து உரிமையாளர்கள் ஊக்கத் தொகை பெற்றுள்ளனர். இந்த காலகட்டத்தில் ரூ.290.62 கோடி சொத்துவரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட திருத்தத்தின்படி 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியுடையவர் ஆகிறார்கள். உரிமையாளர்கள் சொத்து வரியை தங்கள் இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். நம்ம சென்னை மற்றும் பேடிஎம் செயலி, சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையாகவும் செலுத்தலாம்.

எனவே, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை ஏப்ரல் 30ம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகையை பெற்றிடுமாறும், சென்னை மாநகரத்துக்குள் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்கிடவும் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்