தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindigul: ‘தேவராட்டம் ஆடி மோதிரம் பரிசு’தலைமை ஆசிரியரை கொண்டாடிய கிராம மக்கள்

Dindigul: ‘தேவராட்டம் ஆடி மோதிரம் பரிசு’தலைமை ஆசிரியரை கொண்டாடிய கிராம மக்கள்

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 29, 2023 11:32 AM IST

37 ஆண்டுகளாக கரிசல்பட்டி தர்மத்துப்பட்டி உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

ட்ரெண்டிங் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே பெத்தநாயக்கனூர் கிராமம் உள்ளது.  இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கஞ்சி பட்டி ஜக்கம்மாபட்டி பெத்தநாயக்கனூர் உள்ளிட்ட நான்கு கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருகின்றன. இந்தப் பள்ளியில் 13 ஆண்டுகளாக அருளானந்தம் என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இங்கு பணியாற்றிய வருடத்தில் பள்ளி முன்னேற்றத்திற்காக கழிவறை சுற்றுச்சுவர் குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தார். இதற்கு அந்த ஊர் பொதுமக்கள் முழு ஆதரவு கொடுத்து தாங்களும் இணைந்து பள்ளியை மேம்படுத்தினர். அருளானந்தம் 37 ஆண்டுகளாக கரிசல்பட்டி தர்மத்துப்பட்டி உள்ளிட்ட பள்ளிகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி தேர்வுகள் முடிந்து இறுதி நாளான வெள்ளிக்கிழமை தலைமை ஆசிரியர் பணி ஒய்வு பெறுவதால் அவருக்கு வழியனுப்பும் விழா ஊர் பொதுமக்கள் சார்பாக ஏப்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெத்தநாயக்கனூர் மக்களின் முக்கிய கலையான தேவராட்டத்தினை பள்ளி மாணவ மாணவிகள் உருமி அடித்து நடனமாடி ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு பவுன் மதிப்புள்ள தங்க மோதிரத்தை பரிசாக அளித்து தலைமை ஆசிரியருக்கு பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ஆரோக்கிய ராணி தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க வனராஜ் பள்ளி உதவி ஆசிரியர் நூர்ஜகான் முன்னாள் ஆசிரியர்கள் ஜெயந்தி அருள்தாஸ் ஊர் நாயக்கர் தங்கராஜ் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

டாபிக்ஸ்