தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Erodeelection: Aiadmk Election Office Sealed The Hall Where It Functioned Without Permission

ErodeElection: அனுமதியின்றி அதிமுக தேர்தல் அலுவலகம் செயல்பட்ட மண்டபத்திற்கு சீல்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 09, 2023 01:01 PM IST

அதிமுகவினர், ஆளும் கட்சியை சேர்ந்த திமுகவினர் தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டு வாடாவில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆய்வுக்கு செல்லாமல் இங்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சீல் வைக்கப்பட்ட மண்டபம்
சீல் வைக்கப்பட்ட மண்டபம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில் ஈரோடு கிருஷ்ணன்பாளையம் ஜீவா நகர் பகுதியில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான பிரகாஷ் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த திருமணம் மண்டபத்தில் உரிய அனுமதி பெறாமல் அதிமுகவினர் தேர்தல் அலுவலகமாக பயன்படுத்தி வந்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இன்று பிரகாஷ் திருமண மண்டபத்திற்கு நேரில் ஆய்வுக்கு சென்றனர். அப்போது அங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் அமர்ந்து ஈரோடு இடைத்தேர்தல் பணிகளை மேற்கொண்டு இருந்தனர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்பொழுது அதிமுகவினர், ஆளும் கட்சியை சேர்ந்த திமுகவினர் தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டு வாடாவில் ஈடுபடுகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஆய்வுக்கு செல்லாமல் இங்கு வந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திருமண மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்குமார் திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தார்.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பெயரில் தான் சீல் வைப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதாக திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வினார் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். சீல் வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் வெளியூர் அதிமுகவினரும் முகாம் அமைத்து தேர்தல் பணிகளை பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா திடீர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 27 ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  இதில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்