தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Erode By Election: ஸ்டாலின் வந்தால் இது கண்ணில் படக்கூடாதா? - மோகனா நவநீதன்

Erode By Election: ஸ்டாலின் வந்தால் இது கண்ணில் படக்கூடாதா? - மோகனா நவநீதன்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 24, 2023 01:39 PM IST

முதல்வர் ஸ்டாலின் வருவதால் இந்த கட்சி கொடி அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக இதை செய்கின்றனர்.

இடைத்தேர்தல் பிரச்சசாரம்
இடைத்தேர்தல் பிரச்சசாரம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் இரண்டு பேர், மூன்று பேராகத் திண்ணை பிரச்சாரம் செய்ய காவல் துறை அனுமதிக்காமல் அவர்களை கைது செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். அதில்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் இரண்டு பேர், மூன்றாக பல இடங்களில் திண்ணை பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் அப்படி பிரச்சாரம் மேற்கொள்பவர்களை காவல் துறையினர் கைது செய்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் காவல் துறையினர் நாம் தமிழர் கட்சி பிரச்சாரத்திற்கு இடையூறு செய்வதாக கூறி, ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் புகார் அளித்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் மனு அளித்தபின் பேட்டியளித்த வேட்பாளர் மேனகா , "மக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத வகையில் கொடியுடன் மூன்று பேர் செல்ல கூட காவல் துறை அனுமதிப்பதில்லை எனவும், பிரச்சாரம் மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினரை போலீசார் தாக்கி கைது செய்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

திண்ணை பரப்புரை செய்ய எந்த அனுமதியும் தேவையில்லை. இப்போது திடீரென அனுமதி வாங்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் சொல்கின்றனர். பரப்புரை செய்யவிடாமல் காவல் துறை தடுக்கின்றது. பல்வேறு இடங்களில் காவல் துறை 40 பேருக்கு மேல் கைது செய்து இருக்கின்றது.

நாம் தமிழர் கட்சி மட்டும் அனுமதி வாங்க வேண்டும் என்கின்றனர், பிற கட்சிகள் எந்த அனுமதியும் இல்லாமல் பிரச்சாரம் செய்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் வருவதால் இந்த கட்சி கொடி அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக இதை செய்கின்றனர்.

மன உளைச்சலை கொடுக்க தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். நாம் தமிழர் மீது தொடர்ந்து வழக்குகள் போடுகின்றனர், இதை எதிர்கொள்வோம்" என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்